Saturday, November 15, 2008


இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த " கரகாட்டக்காரன்" பார்ட்-II நம்ம டவுசர் புகழ் கி "ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்� ��ிருக்கா�� �். ராமராஜன் - CEO/CTO கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர் . செந்தில் - டீம் லீட் ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் . கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர் . காட்சி 1: புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியி� ��ுக்கிறா�� �்கள் . மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள். ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க !!! கவுண்ட்ஸ் : என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை . ரா .ரா : யார் யாரு??? கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி . சி . எஸ் பண்ணாங்க ! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ - கதவு மெயிண்டெயின் பண்ணாங்க !!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு !!! செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார் . கவுண்ட்ஸ் : யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட ... ரா . ரா : ஏன்ன அடிச்சிங்க ??? கவுண்ட்ஸ் : ஏன் அடிச்சனா ? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா ? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட ??? .... 2 நிமிடம் கழித்து கவுண்ட்ஸ்: அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா ? 1 நிமிடம் கழித்து: கவுண்ட்ஸ்: ஹும் !!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட ? மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது. ரா . ரா : ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க ? அப்படி என்னதான் கேட்டான் ? கவுண்ட்ஸ் : என்ன கேட்டானா ? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்... ஐ - கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான் . ஜி . பாலையா : ஹாஹாஹா கவுண்ட்ஸ் : அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை . இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா . ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது ? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்த� ��ருக்கான�� � பாரு பேரிக்கா மண்டையன் . காட்சி - 2: செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார். புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு... கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா ? புதுசு : இல்ல கவுண்ட்ஸ் : சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா ? புதுசு : இல்ல கவுண்ட்ஸ் : அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன ... ஏய் சொல்லு... சொல்லு புதுசு : சொல்றங்க !!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க.. அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!! கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே !!! (செந்திலைப் பார்த்து ): ஏண்டா இப்படி பண்ண ? செந்தில் : ஒரு விளம்பரம்தான்... கவுண்ட்ஸ் : ஏண்டா!!! இந்த onsite ல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான் !!! நமக்கு எதுக்குட இதெல்லாம் ? ( சரளாவைப் பார்த்து ): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி ? லொல்லு ???? கோ . சரளா : தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா !!! என்னை TCS ல கூப்டாகோ , CTSல கூப்டாகோ , infosys ல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன் ... கவுண்ட்ஸ் : ஹிம்ம்ம்ம்ம்ம் ......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracle ல கூப்டாகோ , நியூ யார்க்ல IBM ல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர ? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா ? கோ . சரளா: ஹிக்க்க்க்ம் ... இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை ... கவுண்ட்ஸ் : ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க

0 comments: